Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, 9 October 2020

கொக்கட்டிச்சோலையில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இரு இளைஞர்கள் பலி மூவர் படுகாயம்!

 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மணல்பிட்டி பகுதியில் உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்ட வீதிவிபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் உயிரிழந்ததுடன் மூவர்  படுகாயமடைந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (09) பகல் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.  



கொக்கட்டிச்சோலை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய திலக்சன், 19 வயதுடைய தி தினுஜன் என்ற இரு இளைஞர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

கொக்கட்டிச்சேலை தாந்தாமலை பிரதான வீதியில் சம்பவதினமான இன்று பகல் 11 மணியளவில் கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து தாந்தாமலை பகுதியை நோக்கி உழவு இயந்திரத்தில் நான்கு பேர் பயணித்தனர்.

இதன் போது மணல்பிட்டி சந்திப்பகுதியில் வீதியில் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றிற்கு வழிவிடமுற்பட்டபோது வேகமாக சென்ற உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டுவிலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானத்தில் இருவர் சம்பவ இடமத்தில் உயிரிழதுள்ளதுடன் படுகாயமடைந்த மேலும் இருவர் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கமைய சடலத்தை பார்வையிட்ட மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை போக்குவரத்து பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.





No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot