Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, 5 October 2020

ஆபிரிக்கா முழுவதும் 15 இலட்சம் புதிய கொரோனா தொற்றாளர்கள் - உலக சுகாதார ஸ்தாபனம்

 ஆபிக்க கண்டத்தில் 54 நாடுகளில் பதிவுசெய்யப்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 15 இலட்சத்தை கடந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாகனம் தெரிவித்துள்ளது . 



நேற்றைய தினம் நாளாந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,505,244 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன . அதேவேளை 36,319 பேர் உயிரிழந்துள்ளார்கள் .

வட ஆபிரிக்க நாடான எகிப்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் .

அங்கு 103,575 பேர் கொரோகாவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 6,000 க்கும் குறைவான உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .

ஆப்பிரிக்காவில் அதிக சனத்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் 60,000 க்கும் குறைவானர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு , 1,113 பேர் உயிரிழந்துள்ளனர் .

ஒட்டுமொத்தமாக , ஆப்பிரிக்காவின் தொற்றுநோயியல் நிலைமை தொற்றுநோயின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட மோசமான கணிப்புகளிலிருந்து இதுவரை குறைந்துவிட்டது . 



ஒப்பீட்டளவில் இளம் மற்றும் அதிக கிராமப்புற சனத்தொகை , உலகின் பிற பகுதிகளுடன் குறைந்த தொடர்பு மற்றும் குறைந்த பரிசோதனை திறன் ஆகியவை முக்கிய சாத்தியமான விளக்கங்களாகக் காணப்படும் 1.2 பில்லியனுக்கும் அதிகமான சனத்தொகை கொண்ட கண்டத்தில் இது ஏன் என்று வல்லுநர்கள் ஆய்வு செய்கின்றனர் , வறிய கண்டத்தில் தொற்றுநோயின் பொருளாதார தாக்கம் கவலைக்குரிய ஒன்றாகும் ,

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot