Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, 9 October 2020

கொரோனா நிலவர உண்மை பற்றி கூறியதால் மருத்துவர் ஜயருவன் பதவி நீக்கம்.

 

இலங்கை செய்திகள்

இலங்கையின் கொரோனா நிலவரம் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறியதாலேயே பொரள்ளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவன் பண்டாரவை அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சாடியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவாத்தையின் போது;

நான் நியமித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தற்போது நீக்கப்பட்டுள்ளார். அந்த பணிப்பாளர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனேயே முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். அவர் தனிப்பட்ட ரீதியில் நல்லவர். அவரது திறமையை பார்த்தே நான் அந்த பதவியில் நியமித்தேன். அவருக்கு நிறைவேற்று தரத்திலான தகுதி இருக்கவில்லை என்பதுதான் சிறிய பிரச்சினை.
இதனால், அவரை நான் பதில் பணிப்பாளராக நியமித்தேன். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மிகவும் பலவீனமாக இருந்தது, அதனை முன்னேற்றவே அவரை நியமித்தேன். அவர் அதனை முன்னேற்றினார்.

மருத்துவர் என்ற வகையில் அவர் அறிக்கைகளை வெளியிட்டார். அவர் அப்படியான அறிக்கைகளை வெளியிட்டாலும் அரசாங்கம் கொரோனா பரவல் முடிந்து விட்டது என்றே காட்டியது.

PCR பரிசோதனைக்கான கேள்வி மெனுவையும் அரசாங்கம் இரத்துச் செய்தது. அவர் ஆதரித்த அரசாங்கமே அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்போது என்ன கூறுகிறது என்று நான் கேட்கிறேன்?. என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot