Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, 5 October 2020

இலங்கையில் எந்த நேரத்திலும் ஊரடங்கு சட்டம் சாத்தியம் ! சற்றுமுன் வெளியாகியுள்ள தகவல்

 நாட்டின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார் . 



எனவே சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் "நாட்டு மக்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் ".



நாட்டில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு சற்று முன்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார் .

இதேவேளை மினுவங்கொட ஆடை தொழிற்சாலையில் மேலும் 69 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot