Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 4 October 2020

எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையும்

 👉தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.



எதிர்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் குறையக்கூடும் என்று தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையம் கூறியுள்ளது. இதேவேளை நாட்டில் தங்க இருப்புக்கு பஞ்சமில்லை என்றும் தேசிய ரத்தின மற்றும் நகை ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் ஹர்ஷா இலுக்பிட்டிய தெரிவித்தார்.

நாட்டிற்கு ஆண்டுக்கு சுமார் 10 டொன் தங்கம் தேவைப்படுகிறது, தற்போது நாட்டில் தங்கத்தின் தேவை உள்ளது, எனவும் அவர் தெரிவித்தார்.



தற்போது 22 கரட் தங்கத்தின் சந்தை மதிப்பு 90,000 முதல் 92,000 ரூபாய் வரை உள்ளது.உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (31.1034768 கிராம் அதாவது சுமார் 4 பவுன்) 21 ஆம் திகதியுடன் ஒப்பிடும்போது 23 ஆம் திகதிக்குள் 66 அமெரிக்க டொலர் குறைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (31.1034768 கிராம்) ரூ. 9712.317 கொழும்பு தங்க சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை (31.1034768 கிராம்) ரூ. 7775.869 என்றும் பதிவிடப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot