Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, 6 October 2020

அரச உத்தியோகத்தர்களுக்கான பஸ் சேவை ஆரம்பம் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆரம்பித்து வைப்பு.

 மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கான  புதிய பஸ் சேவையொன்று, அரச உத்தியோகத்தர்களுக்காக, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனால்  ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து காலை 5 மணிக்கு உத்தியோகபூர்வமாக இச்சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பல வருடங்களாக, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து திருகோணமலைக்கு அரச சேவைக்காக நாளாந்தம் சென்று வரும் நூற்றுக்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களின் நன்மை கருதி, இந்த பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot