மறைந்த குவைத் மன்னர் ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் -க்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் துக்கத்தை நாடு முழுவதும் அனுஷ்டிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. நாடு முழுவதுமுள்ள அனைத்து கட்டிடங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கும். இன்று, எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஹத்ராஸ் கூட்டு வல்லுறவு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். நேற்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்களை ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினர். பின்பு, ராகுல் காந்தி தனது ட்விட்டரில், ” ஹத்ராஸ் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்தேன். அவர்களின் வலியை புரிந்துகொண்டேன்.
இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் உறுதுணையாய் நின்று, நீதி கிடைக்க உதவுவேன் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன். உ.பி. அரசு, தான் விரும்பியதை எல்லாம் தன்னிச்சையாக செய்ய முடியாது. இப்போது முழு நாடும் நாட்டின் மகளுக்கு நீதி கேட்டு நிற்கிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
தமிழகத்தில் நேற்று 5,622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 65 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,718 ஆக அதிகரித்துள்ளது.




No comments:
Post a Comment