Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, 7 October 2020

வவுனியாவில் சமாதான நீதவான் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

 வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் பணியாற்றிய கூமாங்குளம் பகுதியில் வசித்து வரும் சமாதான நீதவான் ஒருவர் நேற்று காலை பொலிசார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .

வவுனியா கூமாங்குளம் பகுதியில் வசித்து வரும் குறித்த சமாதான நீதவான் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சமாதான நீதவனாக கடமையாற்றி வருகின்றார். 

இந்நிலையில் அவரிடம் ஒப்பம் பெற்றுக்கொள்வதற்காக கொரோனா நோய் தொற்றுக்குட்பட்டுள்ள தொற்றாளார் ஒருவர் வந்து சென்றதை உறுதிப்படுத்தியதையடுத்து அவரைத்தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர் .

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot